தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,௦௦௦ தொழிற்கல்வி ஆசிரியர்கள்உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள், நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டது.
மேலும், 'இது போன்ற பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு மேம்படுத்தப்பட்ட தேர்வுநிலை தர ஊதியம் வழங்கவேண்டும்' என நிதித்துறை உத்தரவிட்டது.இந்த இரு உத்தரவுகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செவிசாய்க்கவில்லை. 'தர ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என போராட்டங்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நடத்திவருகிறது.மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ''900 பள்ளிகளில் தொழிற்கல்வி நடைமுறையில் இல்லை. 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 2007 முதல் காலியாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு