Pages

    அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை.

    அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.



    இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் தமிழ்மணி, பொதுச்செயலாளர் பா.ப்றைட் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அனைவருக்கும் கல்விஇயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளைநீட்டிக்க வேண்டும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு