உத்திரமேரூர்: பட்டா கிராமத்தில், இருந்த ஒரு தனியார் தொடக்கப் பள்ளியும் மூடப்பட்டதால், அப்பகுதி குழந்தைகளின் அடிப்படைக் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அக்கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா கிராமத்தில், 20 ஆண்டுகளாக, தனியார் தொண்டு நிறுவன தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. மூன்று மாதங்களுக்கு முன், அந்த பள்ளி மூடப்பட்டது.
பக்கத்து கிராமங்களில்...
அந்த பள்ளியில், கல்வி பயின்று வந்த, 30 குழந்தைகள், பக்கத்து கிராமங்களில் உள்ள, பள்ளிகளில், சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இயங்கி வந்த தனியார் பள்ளிக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளதால், சிறுதாமூர், அருங்குன்றம், குண்ணவாக்கத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டி உள்ளது. குழந்தைகள் தினமும் அப்பகுதிகளுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இதுவரை இங்கு தனியார் பள்ளி இருந்ததால், எங்கள் கிராமத்திற்கு அரசு பள்ளியின் தேவை குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை.
ஆரம்ப கல்வி?
எங்கள் கிராமத்தில் அரசு, புதிதாக பள்ளி ஒன்றை அமைத்து தரவில்லை என்றால், எங்கள் பகுதியிலிருக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர். உத்திரமேரூர் ஒன்றிய கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பட்டா கிராமத்திற்கு, புதிதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தேவை என்பது குறித்து, கல்வித்துறைக்கு முறையாக விண்ணப்பிக்க, அப்பகுதிவாசிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு