ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டு, இப்போது மீண்டும் பேரவை திங்கள்கிழமை கூடுகிறது. காவல், தீயணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான மானியம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடஉள்ளார்.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. அவை உரிமை மீறல் குழுவின் அறிக்கை பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.கருணாநிதியிடம் இருந்து உரிய விளக்கத்தைப் பெற ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி இதுவரை தனது விளக்கத்தைத் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு