Pages

    டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல்

              ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி..,வின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.கடந்த 1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா, உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.., பணியில் சேர்ந்தார்.


                  ஐதராபாத்தில் உள்ள, ராணுவ மின்னணு ஆய்வகத்தில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மஞ்சுளா, டிபன்ஸ் ஏவியானிக்ஸ் ரிசர்ச் எஸ்டாபிளிஷ்மென்ட்டின் இயக்குனராக இருந்தார். தற்போது டி.ஆர்.டி..,வில், டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    சிறந்த செயல் திறனுக்கான, டி.ஆர்.டி.., விருது, 2011ம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது, 2014ம்ஆண்டுக்கான இந்தியா டுடே மகளிர் உச்சி மாநாடு விருது ஆகிய விருதுகள், மஞ்சுளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளன.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு