Pages

    கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?

    அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.


    அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.

    இந்நிலையில் உரிய கல்வி, வயது தகுதியுடன் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என 2010ல் தமிழக அரசு உத்தரவிட்டது. மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் இதை பிறப்பிப்பதாக அறிவித்தது. இதனால் அரசு ஊழியரின் வாரிசு 18 வயதுக்குள் கீழ் இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

    இதற்கிடையே மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையை 2012 ஜூலை முதல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு ரத்து செய்தது.இது போல் தமிழக அரசும் இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும். இதன் மூலம் பலர் பயன்பெறுவர் என, அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு