Pages

    ஆசிரியர் தினத்தை ஆறப்போடும் கல்வித்துறை

             மாவட்ட அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும்,டிசம்பருக்கு பிறகே நடத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.



                  
    நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2-வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடியில் ஒரு முறையும், சிவகங்கையில் மறுமுறையும் என ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது.மாவட்ட எம்.பி., எம்.எல்..,க்கள், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

    கடந்த ஆண்டு சிவகங்கையில் ஆசிரியர் தின விழா நவம்பர் மாதத்துக்கு பிறகே நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆசிரியர் தின விழா நடத்துவதற்கான எவ்வித முன்னேற்பாட்டையும் இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எதுவும், உரிய நேரத்தில் நடத்த வேண்டும், என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: கடந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற, சிவகங்கை நகராட்சி தலைவர் அர்ச்சுனன், "அடுத்த ஆண்டாவது செப்டம்பரில் நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.அரசியல் பிரமுகர்களை விழாவுக்கு அழைக்கும் பட்சத்தில், அவர்களது தேதி கிடைப்பதில் சிரமம் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கூறப்படுகிறது.

    டிசம்பர் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும், அதன் பிறகு பொது தேர்வுக்கு தயாரித்தல் போன்ற பணிகள் இருப்பதால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் இந்த விழாவில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் ஆசிரியர் தினவிழாவை நடத்த வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு செப்.5ல் ஆசிரியர் தினத்தை நடத்தியுள்ளனர். அதே போன்று இங்கும் நடத்த வேண்டும், என்றார்


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு