Pages

    மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி.

    பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது; 1,200 இடங்கள் காலியாக உள்ளன.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள் உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின.

    TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்.

    தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க ஜாக்டோ கூட்டத்தில் முடிவு

    அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என ஜாக்டோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள்... மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

    பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

    ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது.

    ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.


    காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    TNPSC: மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்

    மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

    TET அறிவிப்பு எப்போது.... வருங்கால ஆசிரியர்கள் ஏக்கம்.

    பட்டா கிராமத்திற்கு அரசு பள்ளி தேவை

    உத்திரமேரூர்: பட்டா கிராமத்தில், இருந்த ஒரு தனியார் தொடக்கப் பள்ளியும் மூடப்பட்டதால், அப்பகுதி குழந்தைகளின் அடிப்படைக் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அக்கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா கிராமத்தில், 20 ஆண்டுகளாக, தனியார் தொண்டு நிறுவன தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. மூன்று மாதங்களுக்கு முன், அந்த பள்ளி மூடப்பட்டது.

    மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம்.

     உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரியுள்ளது.

    தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே

    தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.

    பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்.

    ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு


             மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

    கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?

    அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

    இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.

    மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...


    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

    உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை உதவியாளர்களுக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

    வீடு தோறும் இணையம் தமிழக அரசு அறிவிப்பு...




    தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு
    தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கின்றனர். 

    'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

            இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.