Pages

    வேலைவாய்ப்பும், பதவியும் அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை


    அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்...வீடியோ


    கோபி: அதிமுகவினர் யாரை கைகாட்டுகின்றனரோ அவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    DGE - SSLC Science Public Exam Practical 2018 - Conducting Dates And instructions





    குரூப் 4 தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவியாளர் ஏற்பாடு செய்வதில் தாமதம்

    சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு வேறு ஒருவருக்குள்ள விடைத்தாளை வழங்கியது தெரியவந்துள்ளது.

    சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் திருப்பூரைச் சேர்ந்த சுபிதா என்கிற பார்வையற்ற மாற்றுத் திறனாளி தேர்வு எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் அரை நேரம் வழங்காமல் ஒன்றே முக்கால் மணிக்கே விடைத்தாளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கெல்லாம் மேலே சுபிதாவுக்கு அவருக்குரிய விடைத்தாளை வழங்காமல், தேர்வெழுத வராமல் இருந்த சவீதா என்பவரின் விடைத்தாளைக் கொடுத்துள்ளனர். இதனால் ஓராண்டாக முயன்று படித்தது வீணாகிவிடுமோ என அந்த பெண் கவலை தெரிவித்துள்ளார்.

    72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு நீட் பயிற்சி- செங்கோட்டையன் பேச்சு

    தமிழகத்தில் 72 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

    TNPSC : GROUP 4 TENTATIVE ANSWER KEY

    இன்று நடைபெற்ற TNPSC Group 4 Exam - க்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் IAS Academy & TNPSC Coaching Centres வழங்கும் தற்காலிக விடைக் குறிப்புகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
    Click here for - MATHS QUESTIONS

    Click Here for - Genaral Tamil With Evidence

    Click Here for - General Knowledge..

    TNPSC : குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்




    ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 169 மையங்களில் 66 ஆயிரத்து 357 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

    இந்த தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வட்டாட்சியர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன

    ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

    BREAKING NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு

    ”பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து".

    முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.

    மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

    பத்திரிக்கை செய்தி இங்கு கிளிக் செய்யவும்

    TNTET VIDEO : தமிழகத்தில் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் 'வெயிட்டேஜ் முறையைத்' தொடர தமிழக அரசு முடிவு.





    Thanks to 🙏
    புதிய தலைமுறை தொலைக்காட்சி

    TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு

    ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு

    தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தலைமையாசிரியர் மாணவனால் தாக்கப்பட்டதை கண்டித்து - நாளை 8.2.18 ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு!

    வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பு

    நேற்று 06.02.2018 வேலூர் ஆசிரியர் இல்லத்தில்  நடைப்பெற்ற அவசர கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் தீர்மானங்களாக ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.


    1.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாணவனால்தாக்கப்பட்டத்தற்கு இக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2.மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு  பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கி உரிய அரசாணை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.

    3.தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும்.

    4.வரும் வியாழக்கிழமை 08.02.2018 அன்று இதனை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்  கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

    5. இத்தீர்மானங்களை வலியுறுத்தி அன்று மாலை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வழியாக அரசுக்கு முறையிடுதல்.

    வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பிற்காக .

    Thanks to Mr. G.D. Babu, மாவட்ட செயலாளர், TAMS, Vellore.

    தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி

    TNTET: 2013 தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படிப்படியாக வேலை - செங்கோட்டையன் பேட்டி

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல்

    நாட்டினார்.

    ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்


    ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை. கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது.

    'கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

    'கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான, இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்

    மதுரை: மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.

    மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டம், மதுரையில், பிப்.,9ல் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்குவதற்கு, ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், 'பிப்., 9ல் சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்' என, கல்வி இயக்குனர், இளங்கோவனும் அறிவித்தார். ஒரே நாளில், இரண்டு இயக்குனர்களும் கூட்டம் நடத்த முடிவு செய்ததால், மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், செயலர் பங்கேற்க முடிவு செய்துள்ளதால், கடைசி நேரத்தில், சென்னையில் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது' என்றார்.

    கொடூரம்: திருப்பத்தூர்: தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர் தப்பியோட்டம்.

    வேலூர்: அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியான திருப்பத்தூரில் திங்கட்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். பாபு (52), வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டுக்கொண்டு வந்த போது, இன்று மதியம் 1 மணியளவில், அப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் அவரை கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளார்.

    இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டு வந்த போது, இரண்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் பாபுவை, ஒரு மாணவன் கத்தியால் தாக்கியதில், அவரது காது மற்றும் வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.

    வலியால் துடித்த பாபுவை அப்படியே விட்டுவிட்டு மாணவர்கள் அங்கிருந்த தப்பியோடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாபு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அவர்கள் பிடிபட்டால்தான், இந்த தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்பது தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பும், மாணவர் ஒருவர், வேதியியல் தேர்வின் போது காப்பி அடித்து சிக்கியதால், அந்த ஆத்திரத்தில் பாபுவை கத்தியால் தாக்க முயன்று பிடிபட்டார். இந்த சம்பவத்தின் போது பாபு சிறிய காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.