உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே
தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.
பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்.
ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு
மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.
மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.
'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு
இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.
மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.
பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
"பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை
ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. சில பள்ளிகளில் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை மாணவ - மாணவியரை பெருக்கச் செய்வது, கழிப்பிடங்களை சுத்தப்படுத்துவது, ஆசிரியர்களுக்கு டீ, காபி போன்றவற்றை வாங்கி வர, கடைகளுக்கு அனுப்புவது போன்ற செயல்களில், ஆசிரியர்கள் ஈடுபடுத்துகின்றனர்.
கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்தஇரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. இந்த ஆண்டு, தேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால், மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாகமாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர்.
பி.எட். கலந்தாய்வு செப்.28-ல் தொடங்குகிறது: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு
உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 1,777 பி.எட்.
இடங்கள் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,௦௦௦ தொழிற்கல்வி ஆசிரியர்கள்உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள், நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டது.
பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., 14ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங்
சென்னை:பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 14ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, ஒன்பது வகையான பட்டப் படிப்புகள் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)
