Pages

    TET : தகுதிகாண் மதிப்பெண்முறை காரணமாக 75000 பேர் வேலை இல்லாமல் தவிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்ட

    சென்னை, டிச. 23–பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும்.இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர்.

    2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித்தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவித்தார்.தகுதித் தேர்வில் வெற்றி பெற 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55 சதவீதமாக குறைத்த தமிழக அரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது.அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15 சவீதம், 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10 சதவீதம் சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது.15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80 சதவீத மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100 சதவீத மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது.இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது.

    அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10–15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் தகுதிகாண் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர்.இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது.இதற்கெல்லாம் மேலாக தகுதிகாண் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை.தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்


    உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 2000 ஆசிரியர்கள், போலி ஆசிரியர் சான்றிதழ் (பி.எட்.,) வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் போலி சான்றிதழ் அளித்து ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆக்ரா பல்கலை.,க்கு உட்பட்ட ஆக்ரா, மதுரா, மணிப்பூரி, பிரோசாபாத் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில், கல்லூரிக்கே வராத ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் பல்கலை.,யின் மூத்த அதிகாரிகள் பலர் ஈடுபட்டிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

    போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட 5 மூத்த அதிகாரிகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பல்கலை.,அதிகாரிகள் பலருக்கும் பணம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்ற 400க்கும் மேற்பட்ட பல்கலை., மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த போலி சான்றிதழ்களை கொண்டு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் 400 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 2000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    விசாரணையின் முடிவில் பல்கலை., அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

    2012ம் ஆண்டு சுனில்குமார் என்ற மாணவருக்கு, பல்கலை.,யால் இரு வேறுபட்ட தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட விசாரணையிலேயே, இந்த சான்றிதழ் முறைகேடு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கு அறிவிப்பு- ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    பள்ளிக்கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக் கப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.

    இந்த நிலையில், சிறப்பாசிரி யர் நியமனம் தொடர்பாக தொட ரப்பட்ட ஒரு வழக்கில், வெறுமனே பதிவுமூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, பதிவு மூப்பு அடிப்படையில் இல்லாமல் போட்டித் தேர்வு மூலம் சிறப்பா சிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.

    அது தொடர்பான அரசாணை 17.11.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும், எஞ்சிய 5 மதிப்பெண், உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல், என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.

    போட்டித் தேர்வு மூலம் சுமார் 1,400 சிறப்பாசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்கான பணி களை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வந்தது. இதற் கிடையே, பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊன முற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளி களுக்கான 3 சதவீத ஒதுக் கீட்டை (ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம்) அரசுப் பணி யில் ஒழுங்காக நடைமுறைப் படுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப் பித்தது.

    விண்ணப்பங்கள் தயார்

    இதைத் தொடர்ந்து, ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணி களில் எந்தெந்த மாற்றுத்திற னாளிகளுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். ஓவிய ஆசிரியர் பணியில் பார்வையில்லாதவர்களுக்கோ, அதேபோல் உடற்கல்வி ஆசிரி யர் பணியில் உடல் ஊனமுற்ற வர்களுக்கோ இட ஒதுக்கீடு வழங்க இயலாது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர் பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறி விப்பு உடனடியாக வெளியிடப் படும் என்றும் விண்ணப்பப் படிவங்கள் தேவையான அளவு அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
    தேர்வு முடிகள் வெளியாவதில் ஏற்படும் காலதாமதம் விரைவில் களையப்படும்.
    -TNPSC தலைவர் திரு அருள்மொழி.
    தகவல் 
    கார்த்திக் பரமக்குடி

    மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம்: வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி

    சென்னை தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக

    கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்.

    கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.

    65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி.

    தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.

    காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'பல பள்ளிகளில், இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படவில்லை' என, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    TNPSC யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி.


    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

    ஐஐடி நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்: கல்வியாளர்கள் வேண்டுகோள்

    இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ‘எது வளர்ச்சி’ என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி, கிறிஸ்துதாஸ் காந்தி, வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்


                அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!

             அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் - சட்டசபையில் அமைச்சர் பதில்

             சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றனர். 

    பிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு - ரஷ்யா சென்றடைந்தார்

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    ரயில் எண்கள், புறப்படும் நேரத்தில் மாற்றம்: ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு!

    இந்த ஆண்டுக்கான (2015-2016) ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்தப் புதிய ரயில்வே கால அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதில் ரயில்களின் எண்கள், ரயில்கள் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. புதிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரமும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் புதிய ரயில்கள், வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவில்லை.

    அக்டோபர் - 8 யில் ஆசிரியர்கள் போராட்டம் அறவிப்பு...


    கிராம சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு...


    பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் உயர்வு.

    பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக,

    பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு


    பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

    அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை.

    அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.

    சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு.


    அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

    வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

    சார்நிலை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி மற்றும் .

    தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,

    1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு


    தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு

    ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!


    மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

    ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்


    அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகம் முழுவதும் தபால்காரர் பணிக்கு ஆட்கள் தேர்வு: 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பி

    தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள தபால்காரர் (போஸ்ட்மென்) மெயில் கார்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    நாளை நான் ஐஏஎஸ ; எத்தனை முறை எழுதலாம்?

    🌷நீங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும், அதில் வெல்ல வேண்டும் என்று நினைத்தீர்களானால் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் உங்களுக்குப் புதியனவல்ல. புரியாததுமல்ல. அவை:

    பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அவர்கள் மாற்றம் என்பது பொய்யான தகவல்...

    🌺அவர் மாற்றம் என 6மாத திற்கு ஒரு முறை இது போன்ற வதந்தி கிழம்புவது வழக்கமாகி விட்டது.

    🌺அவர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.

    வதந்திகளை நம்ப வேண்டாம் நண்பர்களே..

    பாமக 2016 தேர்தல் அறிக்கை : ஆசிரியர் & அரசு ஊழியர் நலன் !!! முக்கிய அம்சங்கள்:

    ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்:


    *புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
    *7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
    *இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.

    TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை.

    புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:

    20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு :'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்.


           'தினமலர்' செய்தி எதிரொலியாக, 20 ஆண்டுகளுக்குப் பின், முறையாக வினாத்தாள் தயாரித்து, ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, உடற்கல்விப் பாடத்துக்கான தேர்வு துவங்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வாரத்திற்கு இரு நாட்களாவது, உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், சமச்சீர் கல்வி அறிமுகமான போது, ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடும், சி.சி.இ., முறை அமலானது.

    முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

    அரசு நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு, மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    பதவி உயர்வில் விதிமீறல் பள்ளிகளுக்கு எச்சரிக்கை.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி  நீட்டிப்பு வழங்குவதில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

    மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி.

    பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது; 1,200 இடங்கள் காலியாக உள்ளன.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள் உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின.

    TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்.

    தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க ஜாக்டோ கூட்டத்தில் முடிவு

    அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என ஜாக்டோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள்... மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

    பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

    ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது.

    ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.


    காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    TNPSC: மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்

    மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

    TET அறிவிப்பு எப்போது.... வருங்கால ஆசிரியர்கள் ஏக்கம்.

    பட்டா கிராமத்திற்கு அரசு பள்ளி தேவை

    உத்திரமேரூர்: பட்டா கிராமத்தில், இருந்த ஒரு தனியார் தொடக்கப் பள்ளியும் மூடப்பட்டதால், அப்பகுதி குழந்தைகளின் அடிப்படைக் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அக்கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா கிராமத்தில், 20 ஆண்டுகளாக, தனியார் தொண்டு நிறுவன தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. மூன்று மாதங்களுக்கு முன், அந்த பள்ளி மூடப்பட்டது.

    மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம்.

     உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரியுள்ளது.

    தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே

    தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.

    பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்.

    ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு


             மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

    கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?

    அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

    இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.

    மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...


    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

    உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை உதவியாளர்களுக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

    வீடு தோறும் இணையம் தமிழக அரசு அறிவிப்பு...




    தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு
    தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கின்றனர்

    'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

            இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் .டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.