Flash News: அரசு ஊழியர், ஆசிரியர் ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.
Flash News: 7th Pay Commission ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.
தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன.
உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
TNUSRB : TAMILNADAU POLICE EXAM FREE MATERIAL DAILY
6TH MATHS POIENT - CLICK HERE
POLICE EXAM MATHS AND POLITY - CLICK HERE
அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.
DEE : தொடக்கக்கல்வியில் உள்ள அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் - உபரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரமும்
அரசுப்பள்ளியின் இன்றைய நிலை பற்றி ஒரு கவிதை - வினோதன்
நீர் குடிக்கப் பயமா ?
ஆம், குடித்தால்
சிறுநீரகத் தொட்டி
கொள்ளளவு எட்டியதும்
விடுதலை கேட்கும்
மூத்திரத்திற்கு
விடையென்ன சொல்வேன் ?
ஆணைப் போல
அவசரத்திற்கு
திறந்துவிடப்படமுடியாத
உடல் வாகைவிட
நின்று சீறுநீர் கழித்தால்
ஒருத்தியை சமூகம்
எப்படி எடைபோடும்
என நினைக்கும்போதே
அடைத்துக் கொள்கிறது
அத்தனை துவாரங்களும் !
கழிவறைகள் ?
நீங்கள்
அரசுப் பள்ளி
பெண்கள் கழிப்பறையை
கண்டிருக்க வாய்ப்பில்லை,
கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !
ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
எத்தனை இலகுவானதும்
இரக்கமற்றதும் தெரியுமா ?
நீவிர் கண்டறிந்த
எந்த மருந்தையும்
மயிருக்கும் மதிக்காத
எத்தனை பேக்டீரியாக்கள்
ஜனித்திருக்கின்றன தெரியுமா ?
ஒரு முறை தொற்றினால்
வலியென்ற சொல்லின்
உச்சபட்ச அர்த்தத்தை
நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொல்லும்,
மீண்டுவரத் தயங்காமல் !
சரி தீர்வு ?
நுழையும் படியான
ஒரு கழிவறை ?!
அன்றி
சிறுநீர்த் தொட்டியின்
கொள்ளளவு கூட்டல்
சாத்யமில்லை என்பதால்
அருந்தப் பயந்து சாதல் !
நீரின்றி அமையுமாம்
அரசுப்பள்ளி
மாணவியின் உலகம் !
- வினோதன்
தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்ப் பல்கலை. ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
3 மாதங்களில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்
BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
வேலைவாய்ப்பும், பதவியும் அமைச்சர் செங்கோட்டையனின் புதிய சர்ச்சை
அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கே அரசு வேலையாம்...வீடியோ
குரூப் 4 தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவியாளர் ஏற்பாடு செய்வதில் தாமதம்
சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு வேறு ஒருவருக்குள்ள விடைத்தாளை வழங்கியது தெரியவந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் திருப்பூரைச் சேர்ந்த சுபிதா என்கிற பார்வையற்ற மாற்றுத் திறனாளி தேர்வு எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் அரை நேரம் வழங்காமல் ஒன்றே முக்கால் மணிக்கே விடைத்தாளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலே சுபிதாவுக்கு அவருக்குரிய விடைத்தாளை வழங்காமல், தேர்வெழுத வராமல் இருந்த சவீதா என்பவரின் விடைத்தாளைக் கொடுத்துள்ளனர். இதனால் ஓராண்டாக முயன்று படித்தது வீணாகிவிடுமோ என அந்த பெண் கவலை தெரிவித்துள்ளார்.
72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு நீட் பயிற்சி- செங்கோட்டையன் பேச்சு
தமிழகத்தில் 72 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
TNPSC : GROUP 4 TENTATIVE ANSWER KEY
TNPSC : குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 169 மையங்களில் 66 ஆயிரத்து 357 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
இந்த தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வட்டாட்சியர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன
BREAKING NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு
”பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து".
முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.
மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.
TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு
தலைமையாசிரியர் மாணவனால் தாக்கப்பட்டதை கண்டித்து - நாளை 8.2.18 ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு!
நேற்று 06.02.2018 வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைப்பெற்ற அவசர கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாணவனால்தாக்கப்பட்டத்தற்கு இக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கி உரிய அரசாணை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
3.தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும்.
4.வரும் வியாழக்கிழமை 08.02.2018 அன்று இதனை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
5. இத்தீர்மானங்களை வலியுறுத்தி அன்று மாலை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வழியாக அரசுக்கு முறையிடுதல்.
வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பிற்காக .
Thanks to Mr. G.D. Babu, மாவட்ட செயலாளர், TAMS, Vellore.
TNTET: 2013 தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படிப்படியாக வேலை - செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல்
நாட்டினார்.
ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்
'கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?
சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்
மதுரை: மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 2018, பொதுத் தேர்வுகள் தொடர்பாக, அனைத்து சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டம், மதுரையில், பிப்.,9ல் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்குவதற்கு, ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், 'பிப்., 9ல் சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்' என, கல்வி இயக்குனர், இளங்கோவனும் அறிவித்தார். ஒரே நாளில், இரண்டு இயக்குனர்களும் கூட்டம் நடத்த முடிவு செய்ததால், மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், செயலர் பங்கேற்க முடிவு செய்துள்ளதால், கடைசி நேரத்தில், சென்னையில் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது' என்றார்.
கொடூரம்: திருப்பத்தூர்: தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர் தப்பியோட்டம்.
வேலூர்: அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியான திருப்பத்தூரில் திங்கட்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். பாபு (52), வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டுக்கொண்டு வந்த போது, இன்று மதியம் 1 மணியளவில், அப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் அவரை கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், வழக்கம்போல பள்ளியை பார்வையிட்டு வந்த போது, இரண்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் பாபுவை, ஒரு மாணவன் கத்தியால் தாக்கியதில், அவரது காது மற்றும் வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.
வலியால் துடித்த பாபுவை அப்படியே விட்டுவிட்டு மாணவர்கள் அங்கிருந்த தப்பியோடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாபு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அவர்கள் பிடிபட்டால்தான், இந்த தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்பது தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும், மாணவர் ஒருவர், வேதியியல் தேர்வின் போது காப்பி அடித்து சிக்கியதால், அந்த ஆத்திரத்தில் பாபுவை கத்தியால் தாக்க முயன்று பிடிபட்டார். இந்த சம்பவத்தின் போது பாபு சிறிய காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
புள்ளியியல் படிப்புகளுக்கு 'ஆன்லைன்' பதிவு
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை
அரசுப் பள்ளிகளில் முடங்கி கிடக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்: கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?
Flash News :JACTTO GEO - 21ம் தேதி முதல் போராட்டம்.
*.பங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
*.தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு
PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு
டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு