Pages

    4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்



    சென்னை
    -அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்புமுதல் 10-ம் வகுப்பு வரை கணினிஅறிவியல் பாடத்தை கட்டாய பாடமாகஅறிவிக்கவேண்டும், இந்த பாடங்களைநடத்த பி.எட். கணினி அறிவியல்பட்டதாரிகளை ஆசிரியர்களாகநியமிக்கவேண்டும் என்பன உள்பட 4அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பி.எட். கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில்சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்றுகவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.


    உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் வெ.குமரேசன்தலைமை தாங்கினார். தலைவர் .ராமச்சந்திரன் முன்னிலைவகித்தார். உண்ணாவிரதத்தில் பி.எட். கணினி அறிவியல் ஆசிரியர்பட்டதாரிகளின் குடும்பங்களை அரசு காப்பாற்றவேண்டும்’, ‘ சமச்சீர்கல்விக்காக அச்சிடப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரையிலான கணினி அறிவியல் புத்தகங்களை மாணவர்களுக்குவழங்கவேண்டும் என்பன உள்ளிட் பல்வேறு வாசகங்கள் அடங்கியபதாகைகள் வைத்திருந்தனர். சென்னை, காஞ்சீபுரம், நெல்லை,மதுரை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பி.எட்.பட்டதாரி கணினி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு