பதிவு செய்த நாள்
30ஆக2015
06:21
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலைகிராம குழந்தைகளுக்கு, முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் மலைகிராம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் மலைப்பகுதியான கடம்பூர் மற்றும் தாளவாடி பகுதியை சுற்றிலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளி செல்லும் பருவத்தில் உள்ளனர். ஆனால், மலைப்பகுதியில் வசிக்கும் இந்த குழந்தைகள், பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆசியர்கள் மூலம் முழுமையான கல்வி, சமவெளி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி தரத்தில் கால் பகுதி கூட இக்குழந்தைக ளுக்கு கிடைப்பதில்லை.
மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்கின்றனர். மலைப்பகுதி உள்ளடங்கிய யூனியன்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளும், கட்டாயம் ஒரு ஆண்டாவது மலை கிராமங்களில் பணியாற்றியே தீரவேண்டும், என்பது, கல்வித்துறையின் ஆணையாகும். இந்த ஆணை நிறைவேற்றியும் வருகின்றனர்.
ஆனால் இப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கு அவர்கள் செல்வதில்லை. மலை கிராமத்தில் வசிக்கும் பெற்றோர்களுக்கு, போதிய பொது அறிவு மற்றும் கல்வி அறிவு இல்லாததால், தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் மட்டுமே, பள்ளிக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. தவிர, பெற்றோர்கள் பணிக்கு செல்வதால், குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் என்பதால், பள்ளிக்கு அனுப்ப, நினைக்கின்றனர். இதனை ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டு, குறிப்பிட்ட நாட்கள் வருகை தந்துவிட்டு, விடுப்பாகவும், வந்தது போல கணக்கு காட்டி செல்கின்றனர்.
குறிப்பாக, மல்லியம்மன் துருவம், ஊக்கினியம், குன்றி போன்ற அடர்ந்த மலை கிராமங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள், வாரத் துக்கு, ஒரு நாள் மட்டுமே பள்ளிக்கு சென்று, அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்தை போட்டுக்கொண்டு, அவர்கள் வந்த பஸ் திரும்பும்போது, வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர். அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் புத்தகங்களை வைத்துக்கொண்டு, மலை கிராம குழந்தைகள், அவர்களாகவே படித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தொடர்கிறது. ஒரு சில ஆசிரியர்கள் தவிர, 95 சதவீத ஆசிரியர்களின் நிலை இதுவேயாகும்.
இதுபற்றி ஆசிரியர்கள் கூறுகையில், எங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தனியாக டூவீலரில் வனப்பகுதி வழியாக வர முடியாது. வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது. அல்லது, மலை கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு தனியாக வீடுகளை கட்டித்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, மலை கிராமங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்கள் குடியிருப்பில்தான் தங்கி பணியாற்ற வேண்டும், என அரசு ஆணை பிறப்பிக்கலாம். அல்லது, மலைப்பகுதியில் படித்துவிட்டு, வேலை தேடுவோரை, ஆசிரியர்களாக நியமிக்கலாம். அவ்வாறு நியமிப்பதில் சீனியாரிட்டி, கூடுதல் கல்வி தகுதி, ஜாதி போன்றவைகளை பார்க்காமல், நியமனம் செய்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்கின்றனர்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு