தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்கள் அவருடைய பெயரை கல்வி நிறுவனங்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சூட்டி கவுரவித்து வருகின்றன.இந்த வகையில் தேசிய தலைநகர் தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுடெல்லி மாநகராட்சி சற்று நேரத்துக்கு முன்பாகத்தான், ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை என்று பெயர் சூட்ட முடிவு செய்து இருக்கிறது“ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையில் கிழக்கு தில்லி பா.ஜ.க எம்.பி. இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ட்விட்டரில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு