வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் (Block Health Statistician), தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வு நடந்தது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, நேர்காணல் நடந்தது. இதில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தகவல் விரைவஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணைய தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு