Pages

    Transfer News: பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு? மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

    சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
    ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு முறையாக நடக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


    மாறுதல்:

    சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 32 மேல்நிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள் உட்பட, 281 பள்ளிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை நடைமுறைப்படி, பணி மூப்பு அடிப்படையில், தேர்வு செய்யும் இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

     இந்த கலந்தாய்வு ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் நடக்கும். அப்போது, பள்ளிகள் பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பள்ளிகள் சிறப்பாக இயங்கும் வகையில், அதிக துாரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மண்டலத்திற்கு அருகிலேயே பணிமாறுதல் வழங்கப்படும்.

    குற்றச்சாட்டு:

    ஆனால், இந்த ஆண்டு தலைமை ஆசிரியர்களுக்கான பணிஇட மாறுதல் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரிகள், தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு, சிறப்பான தேர்ச்சி விகிதம் பெறும் பள்ளிகளிலும், மற்றவர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து துாரத்தில் உள்ள பள்ளிகளிலும் பணியிட மாறுதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியிட மாறுதல் உத்தரவுக்கு சில தலைமை ஆசிரியர்கள் விருப்பமின்றி, புதிய பள்ளியில் பொறுப்பேற்றுள்ளதாகவும், சிலர் நீதிமன்றத்தில் இதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்விலும், முறைகேடுகள் நடந்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    பாதிக்கும்:

    இதுகுறித்து, மாநகராட்சி விஜிலென்ஸ் விசாரணை வரை சென்றுள்ள நிலையில், மேயர் சைதை துரைசாமி, சமீபத்தில் சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் அதிகாரிகள் தில்லுமுல்லு செய்வதாக எழுந்த புகாரால், ஆசிரியர்கள் போதிய ஆர்வமின்றி பள்ளிகளில் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த கலந்தாய்வு ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் நடக்கும். அப்போது, பள்ளிகள் பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு