தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகள் எட்டப்படாத நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.அதே போல், தமிழக அரசும் தேர்தலுக்கு முந்தைய பணிகளை விரைவாக செய்து வருகிறது. குறிப்பாக, ஏற்கெனவே 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடுதல், திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பணிகள்கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன.கடந்த சனிக்கிழமை அம்மா கைபேசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் நேற்று மட்டும் சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்களை தொடங்கிவைத்தார்.இதற்கிடையில், திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “தேர்தல் நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதன் பின், எந்த ஒரு புதிய அறிவிப்போ, அரசு திட்டம் தொடர்பான புதிய ஆணையோ பிறப்பிக்கக் கூடாது.முந்தைய தேர்தல்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஓரிரு தினங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக, விரைவில் தேர்தல் தேதியை ஊடகங்கள் வாயிலாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின், ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும். அதை நகல் எடுத்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாம். குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அவை அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை துறை அதிகாரிகளுக்கு செயலர்கள் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு