நடப்பு நிகழ்வுகள்மார்ச் -5-2016
Þ தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல,கேரளம், மேற்கு வங்கம்,அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
Þ முதன் முறையாக வரும் தேர்தலில், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
Þ வாக்குப்பதிவு எந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதற்காக நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Þ 5 மாநிலங்களில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி 64தொகுதிகளில் உள்ள 14,066வாக்குச்சாவடிகளில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
Þ முதன்முறையாக இத்தேர்தலில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் படங்கள் இடம்பெறும்.செயலி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
Þ தகவல் தொழில்நுட்பத்தின் முழு பயன்களும் பெறும் வகையில் 3மென்பொருள்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
ü சுவிதா என்ற மென்பொருள் மூலம் பொதுக்கூட்டங்கள்,ஊர்வலம்,பிரசாரத்துக்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் பெறலாம்.
ü சமாதான் மென்பொருள் மூலம் ஆன்லைன் புகார்களை செய்யலாம்
ü பிஎம்எப் மென்பொருள் மூலம் வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் குறித்து அறியலாம்.
Þ பெண்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட பெண்கள் வாக்குச்சாவடிகள் முதன் முறையாக அமைக்கப்படவுள்ளது.
Þ தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 பேரவைத் தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்கள்
ü தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of TheAbove NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ü கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘நோட்டா (NOTA)’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
ü தமிழகத்தில் கடந்த2013 டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில்‘நோட்டா’அறிமுகப்படுத்தப்பட்டது.
ü தேர்தல் ஆணையம்நிர்வாசன் சதன்எனவும் அழைக்கப்படுகிறது.
ü தேர்தல் ஆணையம்ஜனவரி 24,1950 ஆம்ஆண்டு செயல்படத்துவங்கியது
ü தேர்தல் ஆணையம்பற்றி அரசியலமைப்புவிதி 324குறிப்பிடுகின்றது.
ü தேர்தல்ஆணையர்களின்பதவிக்காலம் 6ஆண்டுகள்,குடியரசுத்தலைவரால்நியமயணம் செய்யப்படிகின்றனர்.
ü தேர்தல் ஆணையம் 3உறுப்பினர்களைக்கொண்டஆணையமாக 1989முதல் 1990 வரை செயல்பட்டது. பின்சட்ட்த் திருத்தம்கொண்டு வந்து 1993முதல் 3உறுப்பினர்களைக்கொண்டஆணையமாக செயல்படுகிறது
Þ அய்யா வைகுண்டரின் 184-ஆவது அவதாரத் திருநாள்கொண்டாடப்பட்டது.
கூடுதல் தகவல்கள்
ü 1809-ல் சுவாமி தோப்பு கிராமத்தில் பொன்னு மாடன் மற்றும் வெயிலாள் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோர் “முடி சூடும் பெருமாள்” என்ற பெயரிட்டனர்.“முத்துக்குட்டி”
ü சாதிப் பாகுபாடு தலை விரித்து ஆடிய காலகட்டத்தில் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறு ஏற்படுத்தினார். இந்தக் கிணறுக்கு முத்திரிக் கிணறு என்று பெயர்.
ü சாதிசமத்துவத்துக்காகதுவையல் பந்தி எனும்திருவிழாவினைநட்த்தினார்,
ü அவருடைய சாதி ஒழிப்புக் கோட்பாடுகள்,இயக்கங்கள் இன்று பரவலாக அறியப்பட்டவை.“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்”என்கிற அவருடைய தாரக மந்திரத்தைப் பலரும் குறிப்பிடுவதை இப்போது பார்க்க முடிகிறது. அய்யா வைகுண்டசாமி உருவாக்கிய‘துவையல் பந்தி’என்னும் இயக்கம், பல சாதி மக்களையும் ஒருங்கிணைத்த ஆன்மிக மக்கள் இயக்கம். அவர் வாழும் காலத்திலேயே உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம் இது ஒன்று மட்டும்தான்.
Þ திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் (79) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்
ü இவ்விருது 1969 ஆம்ஆண்டு முதல்வழங்கப்படுகிறது.
ü இவ்விருதை முதலில்பெற்றவர் தெய்வீகாராணி
ü 2010 ஆம் ஆண்டு58வது விருதினைபாலச்சந்திர்ர்பெற்றார்.
ü சிவாஜி கணேசன் 1996ஆம் ஆண்டு 44 வதுவிருதினைப்பெற்றார்.
ü சென்ற ஆண்டு சசிகபூர்இவ்விருதினைப்பெற்றார்.
Þ நாடு முழுவதும் உள்ள லெவல் கிராஸிங்குகளை நீக்கி,தடையற்ற நெடுஞ்சாலை போக்குவரத்தை உறுதி செய்யும் ரூ.50,800 கோடி மதிப்பிலான சேது பாரத திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். வரும்2019-ம் ஆண்டுக்குள் ரயில்வேபாதைகள் குறுக்கிடாதநெடுஞ்சாலைகள்அமைக்கவும், ஆங்கிலேயர்கள்காலத்தில் எழுப்பப்பட்ட 1,500மேம்பாலங்களைபுதுப்பிக்கவும் சேது பாரததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
Þ மக்களவையின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பூர்ணோ அகிடோக் சங்மா, மாரடைப்பு காரணமாக தில்லியில் வெள்ளிக்கிழமை காலமானார்.1988 முதல் 1990ஆம் ஆண்டு வரை மேகாலய மாநில முதல்வராகவும், 1991 வரை அந்த மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் சங்மா இருந்துள்ளார். 1996-இல் பதினோராவது மக்களவை அமைந்தபோது, சங்மா மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். கடந்த2012ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில்,பிரணாப் முகர்ஜியை எதிர்த்து சங்மா போட்டியிட்டார். 2013 ஆம்ஆண்டு தேசிய மக்கள்கட்சியைத் தோற்றுவித்தார்.
Þ ஜமைக்கா நாட்டின் புதியபிரதமராக ஆன்ரிவ்ஹோல்னெஸ் பதவியேற்றுக்கொண்டார்,
Þ ஜிம்பாப்வேயில் அனைத்து வைரச் சுரங்கங்களையும் அரசு டைமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Þ ஹெச்-1பி மற்றும் எல்-1வகையிலான விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) இந்தியா புகார் அளித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு