Pages

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு Current Affairs March 8 PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு
    Þஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளைச் சேகரிக்கதன்னார்வலர்களுக்கு அழைப்பு.ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன.
    Þ   "ஐ.என்.எஸ். விராட்கப்பலில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தலைமைப் பொறியாளர் உயிரிழந்தார். பேர் காயமடைந்தனர்.
    Þமத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.
    கூடுதல் தகவல்கள்

    ü  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1947-ம் ஆண்டு முதலாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அப்போது பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.55 (அடிப்படை சம்பளம் ரூ.30, டிஏ ரூ.25).
    ü  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப் படுகிறது.
    Þ    இந்திய அளவில் 2011ம் ஆண்டு 28மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்ஆண் - பெண் பாலின விகிதத்தில் 1000ஆண்களுக்கு 919 பெண்கள் என்ற விகிதத்தோடு குஜராத் 22வது இடத்தைப் பிடித்துள்ளது.
    Þ    கேரளாவில் கற்காலத்தைச் சேர்ந்த கைக் கோடாரி ஒன்று வனிமேல் ஆற்றின் கரையோரம் கிடைக்கப்பெற்றது
    Þ    ராஜஸ்தானில் பெண்களுக்காக வருடந்தோறும் நடைபெறும் ஒரு திருவிழா. இங்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜோத்பூரில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாதா திங்கரா கவார் எனும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. ஒரு ஆண் கூட அனுமதிக்கப்படாத இவ்விழாவில் முழுக்கமுழுக்க பெண்களே கலந்து கொள்கிறார்கள்
    Þ    நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்களுக்கு அதிக இடம் தரும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில்நார்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
    Þ    கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த உல்சூர் ஏரியில் திங்கட்கிழமை மர்மமான முறையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Þ    பிரிட்டனில் நாய்கள் காணாமல் போவதைத் தடுக்க அவற்றுக்கு "மைக்ரோசிப்மின்னணு சாதனத்தைப் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் அமலுக்கு வருகிறது.
    Þ    மின்னஞ்சலைக் கண்டுபிடித்த ரேமண்ட் டாம்லின்ஸன் (74)காலமானார்.ஒரு கணினியிலிருந்துமற்றொரு கணினிக்குத் தகவல்களை அனுப்பும் முறையை முதல் முதலாக அவர் 1971-ஆம் ஆண்டு உருவாக்கினார்.
    Þ    இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து லசித் மலிங்கா விலகியுள்ளார்
    Þ6-ஆவது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாகபுரியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது..
    Þ    இதுவரை சாம்பியன்கள்
     2007-------------------------------------------------------------------------------------------------------------------------இந்தியா 2009------------------------------------------------------------------------------------------------------------------------பாகிஸ்தான் 2010------------------------------------------------------------------------------------------------------------------------இங்கிலாந்து 2012--------------------------------------------------------------------மேற்கிந்தியத்,தீவுகள் 2014 ---------------------------------------------------------------------------------இலங்கை



    மகளிர் மேம்பாட்டில் தமிழகம்  -ஜெயலலிதா ( முக்கியம் குருப் 1 மற்றும் 2 முத்ன்மைத் தேர்வு)
    தொட்டில் குழந்தைத் திட்டம்,முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்மகளிர் சிறப்பு அதிரடிப் படைதாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை குழந்தையின் பெயருக்கு முன்னர் முதலெழுத்தாக பயன்படுத்துதல்மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் குடிமகள்” என்ற சொல்லை பயன்படுத்துதல்,சாதனைப் பெண்களைப் போற்றும் வகையில்வீரதீரச் செயல் புரியும் பெண்களுக்கு "கல்பனா சாவ்லா விருது"சிறந்தப் பெண்மணிக்கு "அவ்வையார் விருது"திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4கிராம் தங்கம் வழங்கும் பெண்கள் திருமண உதவித் திட்டம்தாய் சேய் நலன் காக்கும் வகையில் நிதி உயர்வு அளித்து திருத்தியமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்,பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம்பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம்தொடர் கல்வித் திட்டம்அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளிகள்கல்லூரிகள்;
    பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அம்மா இலக்கிய விருது”, பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு``அம்மா கைப்பேசி” வழங்கும் திட்டம்,மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள்,பணிபுரியும் மகளிர் விடுதிகள்அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாத கால மகப்பேறு விடுப்பு;
    இல்லத்தரசிகளின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம்விலையில்லா கறவைப் பசுவெள்ளாடுகள் வழங்கும் திட்டம்பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்களுக்கு நவீன ரக தையல் இயந்திரங்கள் வாங்கிட 10ரூ மானியம் வழங்கும் திட்டம்குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம்,பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற வயது வரம்பு 20-லிருந்து 18-ஆக குறைப்புபெண்களின் சுகாதாரத்தினை பேணும் வகையில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம்,குழந்தைகள்பச்சிளம் குழந்தைகள்,வளரிளம் பெண்கள்கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக எடைக் கருவிகள் வழங்குதல், 6 மாதம் முதல் வயது வரை உள்ள குழந்தைகள்கர்ப்பிணிப் பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இணை உணவு வழங்கும் திட்டம்பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் குழந்தைகளுக்கு அன்னையர் பாலூட்ட தனி அறைகள்,உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு சட்டத்தின் மூலம் 1994-ஆம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு என வழங்கியதுதற்போது இந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதம் என உயர்த்தியது போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை தமிழக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக செயல்படுத்தி வருகிறது.
    பெண்களுக்கு அதிகாரமளித்தலில் உலக மகளிர் தினம்’’

    ஆண்களுக்கு இணையாக சமஉரிமை கேட்டுப்  போராடும் பெண்களின் எழுச்சியை அங்கீகரிக்கும்  வகையில் கொண்டாடப்படுவதே உலக மகளிர்  தினமாகும்.  பெண்  விடுதலைபெண்  உரிமை  இவற்றை  போற்றி  பாதுகாக்க  ஆண்டுதோறும்  மார்ச் மாதம் 8ஆம் நாள் உலக மகளிர் தினமாகக்  கொண்டாடப்படுகிறது.

    உலக மகளிர் தின வரலாறு
    வீட்டு வேலைகளைச் செய்யவும் ஆண்களைச்  சந்தோஷப்படுத்தவும்  மட்டுமே  பெண்கள்  படைக்கப்பட்டுள்ளனர்  என்ற  ஆணாதிக்க  கருத்து மேலோங்கி இருந்த காலங்களில் கல்வி,  அறிவு,  பொருளாதார  சுதந்திரம்,  சமஉரிமை  போன்றவை மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள்  நசுக்கப்பட்டுக்  கொடுமைப்படுத்தப்பட்டனர்.  அந்தக் காலக்கட்டத்தில் பெண் விடுதலைக்காக  ஓங்கி  முதல்  குரலை  ஒலிக்கச்  செய்தார்  லைசிஸ்ட்ரா.
    அதையடுத்துப் பிரான்ஸ் நாட்டில் பெண்கள்  புரட்சி வெடித்தது. பிரெஞ்சு புரட்சியின் போது  அந்த நாட்டு பெண்கள் ஓரணியில் திரண்டனர்.  சுதந்திரம்சமஉரிமை,சமூக உரிமை போன்றவை  ஆண்களுக்கு  இணையாக  பெண்களுக்கும்  கிடைக்க வேண்டுமென்று பேரணி நடத்தினார்கள்.  இவ்வாறான  போராட்டங்களும்,  பெண்களின்  உரிமை  குரல்களும்  பல்வேறு  நாடுகளிலும்  ஒலிக்கத்  தொடங்கின.  எண்ணற்ற  நாடுகளும்  இதனை வலியுறுத்தி வந்தனர்.
    19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சர்வதேச  மகளிர் தினம் கொண்டாட யோசனை பரவலாக  இருந்தது.  1909ஆம்  ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள சோசலிஸ்ட் கட்சி தேசிய பெண்கள் தினம்  கொண்டாடப் போவதாக அறிவித்துப் பிப்ரவரி  மாதம் 28ஆம் தேதி தேசிய பெண்கள் தினமாக அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டது. 1913ஆம்  ஆண்டுவரை இது நடைமுறையில் இருந்தது
    இந்நிலையில்  அமெரிக்க  நாட்டில்  உள்ள கோபன்கெகன் நகரில்1910ஆம் ஆண்டு நடந்த  சர்வதேச  பெண்கள்  மாநாட்டில்  சர்வதேச  பெண்கள்  மகளிர்  தினம்  ஒன்றை  உருவாக்கும்  கருத்து எழுந்தது. இந்த மாநாட்டில் 17நாடுகளைச்  சேர்ந்த  100க்கும்  மேற்பட்டவர்கள்  கலந்துகொண்டனர்.  பின்லாந்து  நாட்டு  பாராளுமன்றத்திற்கு  முதல்முறையாகத்  தேர்ந்தெடுக்கப்-பட்ட 3 பெண் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில்  கலந்துகொண்டனர். சர்வதேச பெண்கள் தினம்  கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட்டத்தில் தேதி  எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
    கோபன்கெகன்  மாநாட்டில்  எடுக்கப்பட்ட  முடிவைத் தொடர்ந்து1911ஆம் ஆண்டு மார்ச்  19ஆம்  தேதி  சர்வதேச  பெண்கள்  தினம்  கொண்டாடப்பட்டது. ஆஸ்திரியா,டென்மார்க்,  ஜெர்மனி  மற்றும்  சுவிட்சர்லாந்து  நாடுகளில்  பேரணிகள் நடத்தப்பட்டன.சுமார் 10லட்சத்திற்கும் அதிகமான பெண்கள்  இதில்  கலந்துகொண்டனர்.  ஓட்டுப்  போடும்  உரிமைவேலைகளுக்குச்  செல்லும்,  ஆட்சி  நிர்வாகத்தில்    இடம்பெறும் உரிமை  தொழிற்பயிற்சிக்  கற்றுக்கொள்ளும்  வாய்ப்புப்  போன்றவைகளைக்  கேட்டு  இப்பேரணியில்   முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    பெண்களின் உரிமைகுரல்,சோவியத் யூனியனி  (இன்றைய ரஷ்யா)லும் எதிரொலித்தது.1913ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையை  அவர்கள்  பெண்கள் தினமாகக் கொண்டாடினார்கள். முதல் உலகப் போரில் லட்சக்கணக்கான ரஷிய வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து  பெண்கள் அமைதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்தனர். உலகம் முழுவதும் பெண்களின் சமஉரிமை குரல்  பரவலாக ஓங்கி ஒலித்தது.
    பெண்களுக்குச் சமஉரிமை வழங்கும் முயற்சியில்  ஐ.நா.  சபையும்  தீவிரமாக  ஈடுபட்டது.  இதன் காரணமாக 1945ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் பெண்களுக்குச் சம-
    உரிமை கொடுக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பெண்கள் உரிமையை நிலைநாட்ட  தனி  அமைப்புகள்  சர்வதேச அளவில் உருவாக்-கப்பட்டன.
    ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு நாட்களில் சர்வதேச  மகளிர்  தினம்  கடைபிடிக்கப்பட்டு  வந்தது. இந்த நிலையில் மார்ச் 8ஆம் தேதியில்  பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்ததால்  ஐ.நா.  சபையின்  அங்கீகாரம்  மார்ச்  8ஆம்  தேதிக்குக் கிடைத்தது. பெண்களுக்குச்  சிறப்பு  செய்யும்  வகையில்  1975ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாக  அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது.
    பெண்களின் ஆற்றலைப் புதுப்பிக்க அங்கீகாரம்  செய்திட1999ஆம் ஆண்டை பெண்கள் அதிகார  பகிர்வு  ஆண்டாக  அறிவித்தது.  பெண்களுக்கு  என்று தனி நீதிமன்றங்கள்தனி காவல் நிலை-யங்கள்,  தனி  பல்கலைக்கழகங்கள்  இப்படி  பலப்பல உருவாகின. ‘‘அடுப்பூதும் பெண்களுக்கு  படிப்பெதற்கு?’’என்ற காலம் மாறி ஆண்களுக்கே  படிப்பைச்  சொல்லித்தரும்  ஆசான்களாக  பெண்கள் திகழ்ந்தார்கள்.

    அரியணையில் அன்னையர்குலம்
    அரசியலில் அங்கம் வைத்துப் பெண்கள் மாநில  அளவில் முதல்வர்களாகவும் பிரதமர்களாகவும்  உயர்நிலையை எட்டிப்பிடித்து அதிகாரம் செலுத்துவதிலும்,  நிர்வாகம்  செலுத்துவதிலும்  தங்கள்  பேராற்றலை நிலைநாட்டியுள்ளனர்.உதாரணமாக அன்னை இந்திராகாந்தி. இவர்  1966  முதல்  1977  வரையிலும்    பின்னர்  1980  முதல் 1984 வரையிலும் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
    ü  சுதேசா  கிருபாளனி,  உத்திர  பிரதேச  முதல்வராகவும் (1963&-1967)
    ü   சைதா  அன்வாரா  தைமூர்அஸ்ஸாமின்  முதல்வர் (1980--&1981)
    ü   நந்தினி சத்பதிஒரிசா முதல்வர் (1972-&1976)
    ü  ஜானகி ராமச்சந்திரன்தமிழக முதல்வர் (1988)
    ü  சகிலாகக்கோட்கர் கோவா முதல்வர் (1973--& 1979)
    ü  ஜெயலலிதா,  தமிழக  முதல்வர்  ((1991-&96),  (2001&2006), 2011- முதல் தற்போதைய முதல்வர்
    ü  மாயாவதிஉத்திர பிரதேச முதல்வர் (1995-&97)
    ü  ராப்ரிதேவிபீகார் முதல்வர் (1997-&2000)
    ü  ரஜிந்தர் கஷர் படேல்பஞ்சாப் முதல்வர் (1996&-97)
    ü  ஷீலா  தீட்சித்,  டெல்லி  முதல்வர்  (1998  -2013)
    ü  உமா  பாரதி,  மத்திய  பிரதேச  முதல்வர் ( 2003&2004)
    பாரதத்தின் முதன்மை பெண்கள்
    Ø  இந்தியாவின் முதல் பெண் தூதர் விஜயலட்சுமி பண்டிட்
    Ø  இந்தியாவின்  முதல்  பெண்  பிரதமர் இந்திராகாந்தி
    Ø  இந்தியாவின்  முதல்  பெண்  ஆளுநர் சரோஜினி தேவி
    Ø  இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அமிர்தகௌரி
    Ø  இந்தியாவின்  முதல்  பெண்  நீதிபதி அன்னாசாண்டி
    Ø  இந்தியாவின்  முதல்  பெண்  மாநிலங்கள்  அவை துணைத் தலைவர் நஜீமா ஹெப்துல்லா
    Ø  இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி  கிரண் பேடி
    Ø   எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரிபால்
    Ø  ஆங்கில கால்வாயை கடந்த முதல் இந்திய  பெண்மணி ஆர்த்திசாஹா
    Ø  உலக  அழகி  (மிஸ்  யூனிவர்ஸ்)  பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதாசென்
    Ø  ஆசியா போட்டியில் முதல் தங்கள் வென்ற  முதல் இந்திய பெண்மணி சமல்ஜித்சாந்து
    Ø  இந்தியாவின் முதல் பெண் (மிஸ் வேர்ல்ட்) பட்டம் வென்றவர் ரீட்டாப்ரியா
    Ø  இந்தியாவின் முதல் பெண் விமானி துர்கா பானர்ஜி
    Ø  இந்தியாவிற்கு  பெருமை  சேர்த்த  முதல் விண்வெளி வீராங்களை கல்பனாசாவ்லா
    Ø  இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்
    Ø  இந்தியாவின் முதல் பெண் இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.
                                                                                                                 தொகுப்பு
    ஐயாச்சாமி முருகன்
                                                                                         நெல்லை  

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு