Pages

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016 , Current Affairs March 10

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016
    v சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    v மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை திரும்ப பெற வேண்டும் ல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதம். தமிழக அரசு கடந்த 2005-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. கொண்டுதமிழக அரசுகுடியரசுத்தலைவரின் ஒப்புதலோடுபொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை, 2007-2008ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது 
    v சிவகங்கை மாவட்டம்கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் புதையுண்டுள்ள சங்க காலக் கட்டிடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரையை ஒட்டி பெரிய நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
    v சுற்றுலா பயணிகளுக்கு உகந்த துறைமுகமாக சென்னை துறைமுகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. த்திய சுற்றுலா துறையின் உதவியுடன் வழங்கப்படும் இந்த விருதை தமிழக சுற்றுலா துறை மற்றும் மதுரா வெல்கம் என்ற நிறுவனம் சென்னை துறைமுகத்துக்கு அண்மையில் வழங்கியது.
    v ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள்,பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை மாலை 4மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24மணி நேர கவுன்ட்டவுன் புதன்கிழமை தொடங்கியது.பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும்அதிகபட்சம் 20ஆயிரத்து 657 கி. மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 12ஆண்டுகளாகும். இதன்மூலம் இயற்கை சீற்றம்இயற்கை பேரிடர் மேலாண்மைகடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.
    v தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அதன் அமைச்சகம் வாயிலாக அறிவியலை வெவ்வேறு விதத்தில் மக்களிடையே பரப்புவோருக்கு தேசிய விருதுகளை கடந்த 1987–ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. 2015–ம் ஆண்டிற்கான தேசிய விருது டெல்லியில் வழங்கப்பட்டது.சென்னை இரா.சிவராமனுக்கு கணிதத்தை புத்தகம் மற்றும் இதழ்கள் வழியாக அச்சு வடிவத்தில் இந்தியாவில் பரப்புவதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜபாளையம் கு.கணேசன்திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் வெ.ராஜேந்திரன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.  
    v மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
    v குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சுமார் 300 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.  "ராஜஸ்தான்,ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது;இந்நிலையில்தேர்தலில் அனைவருக்கும் போட்டியிட உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தும் விஷயங்கள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறாதது அதிருப்திக்குரியது என்ற கருத்து தீர்மானத்தில் இடம்பெற வேண்டும்என குலாம் நபி ஆசாத் திருத்தம் கொண்டுவந்தார்.
    கூடுதல் தகவல்
    ü பாரளமன்ற வரலாற்றில் இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையின் மீது திருத்தம் கொண்டு வருவது 5 ஆவது முறை
    ü இந்த ஆட்சியில் இது இரண்டாவது திருத்தம், இதற்கு முன்னர் 1980,1989,2001,2015  ஆகிய ஆண்டுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
    ü அரசியல் சாசன விதி 87ன் படி குடியரசுத் தலைவர் ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு பின்பும், ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் பாரளமன்றத்தில் உரையாற்றுவார்.
    v சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
    v நாடு முழுவதும் பாய்ந்தோடும்111 நதிகளை நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளாக மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. நாட்டில் ஏற்கெனவே தேசிய நீர்வழித்தடங்கள் உள்ளன. அவற்றுடன் சேர்த்து மேலும் 111நதிகளை தேசிய நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளாக மேம்படுத்த வழிவகுக்கும் மசோதாவை மக்களவை கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.

    கூடுதல் தகவல்கள்
    ü உள் நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் 1986ல் அமைக்கப்பட்டது
    ü இந்தியாவில் உள் நாட்டு நீர்வழிப் போக்குவரத்து உகந்ததாக 14,500 கீ.மீ தொலைவு உள்ளது.
    ü  நீர்வழித்தடம் 1- அலகாபாத் முதல் ஹால்டியா வரை, 1986 ல் அறிமுகப் படுத்தப் பட்ட்து (கங்கா-பகிரதை-ஹூக்ளி நதி)
    ü நீர்வழித்தடம் 2 – சாடியா முதல் துப்ரி வ்ரை, 1988ல் ஆரம்பிக்கப் பட்டது.(பிரம்மபுத்ரா)
    ü  நீர்வழித்தடம் -3 கோட்டபுரம் முதல் கொல்லம் வரை , கேரளா, 1993ல் ஆரம்பிக்கப் பட்டது.
    ü நீர்வழித்தடம் – 4 காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை 2008 ஆம் அண்டு துவங்கப் பட்டது.(கோதவரி, கிருஷ்ணா)
    ü நீர்வழித்தடம் -5 தால்சேரி முதல் தம்ரா வரை 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.(பிராமனி , மஹாநதி)
    ü நீர்வழித்தடம் -6---பாராக் நதியில் லாகிபூர் முதல் பங்கா வரை 2013ல் துவங்கப் பட்டது
    v ஹைட்ரஜன் அணுகுண்டுகளை,ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய வகையில் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சிறிதாக்கியிருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கூறியுள்ளார். ஹைட்ரஜன் குண்டுகள் அணுக்கரு இனைவு தத்துவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் படுகின்றன.
    v ஈரான் நீண்ட தொலைவு பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்குக் கூடிய காதர்-ஹெச் மற்றும் காதர்-எஃப் ஆகிய இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.
    vதர்மசாலாவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்.

    v ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (22)வென்ற எனது சாதனையை செரீனா வில்லியம்ஸ் விரைவில் முறியடிப்பார் என முன்னாள் ஜெர்மன் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் தெரிவித்துள்ளார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு