Pages

    DAILY CURRENT AFFAIRS :நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016



    நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016

    Þமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்குபுதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிசன்அமைக்கப்பட்டது. மே 21 ஆம் நாள் தீவிரவாத எதிர்ப்புதினமாக கொண்டாடப் படுகிறது.
    Þ   தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி பெண் அதிகாரிகள்-அலுவலர்களின் மேற்பார்வையில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிதெரிவித்தார்.
    Þ   மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்கார்ஃப் அமைப்பின்நிறுவனர் டாக்டர் சாரதா மேனனுக்கு இந்த ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கப்படுகிறது.

    Þ   சமூக சீர்திருத்தம்மகளிர் மேம்பாடுமத நல்லிணக்கம்,மொழித் தொண்டுகலை,அறிவியல்பண்பாடு,கலாசாரம்பத்திரிகை,நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில்,அவற்றில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    Þ   நாட்டிலேயே முதன் முறையாக பொதுமக்களின் கட்டுமான தேவைகளுக்காக இலவசமாக மணல் வழங்கும்திட்டத்தை தொடங்குவதற்கு சந்திரபாபு தலைமையிலானஆந்திர அரசுதீர்மானித்துள்ளது.
    Þமகேஷ் குமார் சிங்கிளாதலைமையில் அஸ்ஸாம்மாநிலத்தில் 6 இன மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு இக்குழுவை அமைத்துள்ளது.
    Þ   கிராமத்தைச் சேர்ந்த இளைஞரின் தூண்டுதலின் பேரில் பெங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச்(கரேகௌடான்காலித்)சேர்ந்த அனைத்து மக்களும் தங்களது கண்ணை தானமாக அளிப்பதற்கு பதிவு செய்துள்ளனர்.
    Þ   முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முயற்சிக்குத் தடை விதிக்கக் கோரி தொடுத்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. 
    Þ   உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியப் பலன்களில் காணப்படும் முரண்பாடுகளைக் களைய வழிவகுக்கும் மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
    Þ கேரள மாநிலம் ஆலப்புழா நீர் நிலையம் (உப்பங்கழி) இந்தியாவிலேயே முதன் முறையாக சூரிய மின்சக்தியில் இயங்கும் படகை பெற்றுள்ளது
    Þ   மகாராஷ்டிர மாநிலத்தில் கொண்டானே என்ற இடத்தில், ராய்கர் மாவட்டத்தில்குகைஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, மனிதன் வில் அம்பு வைத்து வேட்டையாடுவதுபோன்று உள்ளது. இது கி.மு, 2 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
    Þ   மியான்மரில் ரோஹிங்கயாஇனத்தினர் தொடர்ந்துதுன்புறுத்தப் படுகிறார்கள்,அவதி----ஜான் ஜிங்,ஒருங்கிணைப்பாளர்ஐ.நா. நிவாரணப் பணிகள்.
    Þ   கலிஃபோர்னியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில்போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (51)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    Þ   இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில்புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவு கோலில் 7.9 ஏற்பட்டது.
    Þ    இந்த ஆண்டின் இறுதிக்குள்கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் தொடங்கிவிருப்பதாக சீனாஅறிவித்துள்ளது.
    Þ   உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள்இடம்பெற்றுள்ளனர்.. இதில் ஜிண்டால் குழுமத் தலைவர்சாவித்திரி ஜிண்டால்,பென்னட் கோல்மேன் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான இந்து ஜெயின்,கோத்ரெஜ் குழுமத் தலைவர்ஸ்மிதா கோத்ரெஜ், எஸ்வி நிறுவனக் குழுமங்களின் தலைவர் லீனா திவாரி,ஹேவெல்ஸ் குழுமத் தலைவர் வினோத் குப்தா.
    Þ   இந்தியா என் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற நாடு என்று ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.
    Þ   சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுஅங்கு 340 நாட்கள் தங்கிஆய்வு பணி மேற்கொண்டிருந்த  ரஷ்ய விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தன் ஆய்வு பணியை முடித்து பூமிக்கு திரும்பினார்.
    Þ அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 15ஆண்டுகளுக்குப் பிறகு இண்டியன்வெல்ஸ் (பிஎன்பி பரிபாஸ் ஓபன்) டென்னிஸ் போட்டியில் களமிறங்குகிறார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு