நடப்பு நிகழ்வுகள்மார்ச் -6-2016
Þ தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்
ü தேசிய கீதம் ரபீந்தரநாத் தாகூரால் வங்களா மொழியில் இயற்றப் பட்டது.
ü ஜனவரி 24,1950 ல் தேசிய கீதமாக அங்கீகரிக்கப் பட்டது.
ü முதல் முதலாக 1911 டிசம்பர், 27 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
ü இதனை 52 விநாடிகளுக்குள் பாடி முடிக்கவேண்டும்
Þஅரசியல், பொது வாழ்க்கையில் நேர்மையாக சேவைப்பணி ஆற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உள்ளிட்ட 3பேர் காயிதே மில்லத் விருதுக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.
Þபெண் எம்.பி.க்கள்,எம்எல்ஏக்களின் முதலாவது தேசிய மாநாடு, தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. மகளிர் மசோதாவை விரைவில் நிறைவேற்றுங்கள்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
கூடுதல் தகவல்கள்:
ü 73, 74 வது அரசியலமைப்புச் சட்ட்த்தின் படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு செய்தது.
ü அரசியலமைப்புச் சட்ட விதி 243D உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்கிறது.
ü அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா 108, பெண்களுக்கு , மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மூன்றில் இரண்டு பங்கு இடஒதுக்கீடு செய்வதற்காக பாரளமன்றத்தில் 2008ல் கொண்டு வரப்பட்டது.
ü உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முதல் முறையாக 50% இடஒதுக்கீடு வழங்கியது பிஹார்.
Þஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது,சிறுபான்மை அந்தஸ்தை மீண்டும் பெற ஆதரவளிக்கக் கோரி,பல்கலைக்கழக துணைவேந்தர் ஜமீருத்தீன் ஷா உள்பட 5 பேர் கொண்ட குழுவினர், பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது,கடந்த 1951-ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் அரசால் அமைக்கப்பட்டது.
Þ நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவை,மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நாடாக மாற்றுவதற்காக, "சுகம்யா பாரத் அபியான்' திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
üமாற்றுத்திறனாளிகளுக்காக சட்டம் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் 3% இட ஒதுக்கீடு வழங்கியது.
Þஅருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல்,தனது அமைச்சரவையை சனிக்கிழமை விரிவாக்கம் செய்தார். புதிய அமைச்சர்களுக்கு அருணாசலப் பிரதேச ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Þடிசம்பரில் ஏவப்படும் 4 டன் எடையுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 செயற்கைகோள்,விண்வெளி ஆய்வில் உலக சாதனையை ஏற்படுத்தும் என, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.சிவன் தெரிவித்தார்.
Þரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன், குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலர் சுதிர் மான்கட் உள்ளிட்ட மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Þஅமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பதவிக்கு நியமனமாக வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Þ2021-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக் கலனை தரையிறக்கி ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
Þ பாதுகாவலர் பணிகளை நேபாளிகளுக்கு மட்டுமே வழங்குவது என்ற விதியில் மாற்றம் கொண்டு வருவது குறித்துப் பரிசீலித்து வருவதாக மலேசிய அரசு தெரிவித்தது.
Þ உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளன.
Þ 6-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8-ஆம் தேதி நாகபுரியில் தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி2007-ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டி,சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு