நடப்பு நிகழ்வுகள்மார்ச் -7-2016
Þ உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் கலவரம் நிகழ்ந்தபோது அதைக் கட்டுப்படுத்த மாநிலம் காவல் துறை தவறிவிட்டதாகவும்,இந்த விவகாரத்தில் உளவுத் துறை சரியாக செயல்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.முசாஃபர் நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் 62 பேர் பலியாகினர்.இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு,அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதி விஷ்ணு சஹாயைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உத்தரப் பிரதேச அரசு அமைத்தது.
Þ வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக "ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற திட்டத்தின் கீழ் 5-லிருந்து 6 சிறப்பு உதவி மையங்களை ஒவ்வொரு மாதமும் தொடங்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Þ தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.கேரளா 3–ம் இடத்துக்கு தள்ளப்பட்டதுஇந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு,கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மட்டும் 90சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.உலக அளவில் தென்னை சாகுபடி பரப்பளவில் இந்தோனேஷியா,பிலிப்பைன்சுக்கு அடுத்து 3–வது இடத்தில் இந்தியா இருந்தாலும்,தேங்காய் உற்பத்தியில் ஹெக்டேருக்கு 10,615 தேங்காய்கள் வீதம் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Þ 2018ஆம் ஆண்டுக்கு ஓராண்டு முன்னதாகவே, நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
Þ சவூதியில் கொலைக் குற்றவாளிக்கு ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-ஆவது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-ஆவது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத் தக்கது.
Þகனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜனின் பெயரில் "பர்கர்'அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Þஅரபு நாடான யேமனில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு மாயமான பாதிரியாரை ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவினர் பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Þ சிறார்களை கைது செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 1500காவல் நிலையங்களில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
ÞWallaceophis gujaratensis எனும் பாம்பு குஜராத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது
#Group 2 and 1 mains topic
Þ பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கும்,பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத் திருத் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து ஜனவரி 15-ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
Þ திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
Þ சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் டெல்லி யில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு விமானி உட்பட முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்ட ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது.
Þ ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-ஆவது முறையாகும். இதன்மூலம் ஆசிய கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு