நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 4, 2016
Þ தெற்கு ரயில்வே அலுவலகங்களிலும்,சென்னை ரயில்வே கோட்ட அலுவலங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Þ சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 702பறக்கும் படைகள்அமைக்கப்பட உள்ளன என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிதெரிவித்தார். வாக்குப் பதிவின்போது, "1950' என்றஎண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்குச் சாவடி விவரங்கள் செல்லிடப்பேசியில் வரும்.
Þ தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த பள்ளிக்கான விருது திருப்பூர் மாவட்டம்,வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Þ ,ஈரம் சைண்டிஃபிக்' என்ற தனியார் நிறுவனம்,இந்தியா முழுவதும் 18மாநிலங்களில், 1300 இ- கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. அத்தோடு 'இ- டாய்லெட்' என்ற பெயரில்செயலியையும் உருவாக்கியுள்ளது
Þ திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஏர்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்க்கும் திருநங்கை ஜெயபிரகாஷ் என்கிற ஜெயா
Þ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7பேரையும் அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா உடனே கூட்டி,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம்.என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பின்குறிப்பு
மன்னிக்கும் அதிகாரம்PARDONING POWER
அரசியல் சாசன விதி 72ன் படிகுடியரசுத் தலைவருக்கும், விதி161ன் படி மாநிலஆளுனருக்கும் மன்னிக்கும்அல்லது தண்டனைக் குறைப்புவழங்க வழிவகை செய்கிறது.
Þ பின்வருமாறு
ü மன்னித்தல் (pardon) :குற்றதைமுழுமையாகமன்னித்துதண்டனையிலிருந்து முழு விடுதலை
ü தண்டனை மாற்றம்(Commutation):விதிக்கப்ப்ட்டதண்டனையைமாற்றுதல்எடுத்துகாட்டாகதூக்குதண்டனையிலிருந்து ஆயுள்தண்டனையாககுறைத்தல்
ü தண்டனைக் குறைப்புrespite :தண்டனையைக்குறைத்தல் அதாவது5 ஆண்டுவிதிக்கப்பட்டதண்டனையைமூன்றாண்டாகவோஅல்லது வேறுமாதிரியாகவோகுறைக்கலாம்.
ü இடைஒய்வு Respite:ஏதாவது ஒருகாரணத்திற்காக தண்டனைக்குஒய்வழிப்பதுஉதாரணமாகமகளிரின்கருவுற்றிருந்தால்அது போன்றசமயங்களில்
ü தண்டனைஒத்திப்போடுதல்Reprieve :விதிக்கப்பட்டதண்டனையைநிறுத்தி வைத்தல்
ü குடியரசுத் தலைவர்அனைத்துமன்னிக்கும்அதிகாரங்களையும்பயன்படுத்தலாம்ஆனால் ஆளுனர்மரணதண்டனையைமன்னிக்க முடியாது.
ü குடியரசுத் தலைவரின்அதிகாரம் இந்தியமுழுவதும் செலுத்த்த்தக்கது ஆனால்ஆளுனரின்அதிகாரம்,மாநிலத்திற்குள்மட்டும் தான்செலுத்த இயலும்.
Þ கன்னியாகுமரி மாவட்டம்,பெருஞ்சாணி நீர் மின் நிலையத்தில் 2ஆண்டுகளுக்கு மேலாகியும் இயந்திரப் பழுது நீக்கப்படாததால், மின் உற்பத்திக்கு பயன்படாமல் தண்ணீர் அணையிலிருந்து வீணாக வெளியேறுகிறது.
Þ சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வரும்8ஆம் தேதி,நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்கு (எம்.பி.) மட்டும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.
Þ பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கோஷ், கொல்கத்தாவில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94. 1939 ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் பார்வர்டு பிளாக் கட்சி துவங்கப்பட்டது.
Þ மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்ததற்கு அடையாளமாக ஒப்புகைச் சீட்டு(VVPAT) வழங்கும் முறை,தெலங்கானாவின் கம்மம் நகராட்சித் தேர்தலில் முதல் முறையாக நடைமுறைக்கு வர இருக்கிறது.
Þ இந்திய கிரிக்கெட் துறையை சீர்படுத்தும் நோக்கில் அளிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவது ஏன்? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ அமைப்புக்கு) உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
Þ சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக தமிழகத்தில் உள்ள குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Þ மாநிலங்களவையில் தர்மசங்கடத்தை தவிர்க்கும்ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா வகையில் 'பண மசோதா'பிரிவின் கீழ் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பணமசோதா
ü ஒரு மசோதா பணமசோதவா இல்லையா என்பதை மக்களவைத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய இயலும்
ü பணமசோதா பற்றி அரசியல் சாசனவிதி 110 குறிப்பிடுகிறது.
ü பணமசோதா முதலில் மக்களைவையில் மட்டுமே முதலில் கொண்டுவரப்பட வேண்டும்.
ü பணமசோதாவைப்பொறுத்தவரை மாநிலங்களைவைக்கு அதிகாரம் இல்லை.
ü மாநிலங்களவை பணமசோதாவில் மாற்றங்கள் கொண்டுவர இயலாது, மற்றும் நிராகரிக்க இயலாது.
ü 14 நாட்களுக்கும் மா நிலங்களவை பணமசோதாவின் மீதான நிலையைத் தெரிவிக்காவிடில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
Þ இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌட கூறினார்.அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்கொண்டுவருவதற்கு வழிவகை செய்கிறது.
Þ பிரதமர் மோடி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரது வெற்றிக்கு உதவிய ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 'தேர்தல் விளையாட்டு' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார்.
Þ கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ், முதல் முறையாக இந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம்மேற்கொள்ளவிருக்கிறார்.
Þ நியூஸிலாந்தின் தேசியக் கொடியில் மாற்றம் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு அந்த நாட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Þ வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்தீர்மானம்
Þ நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் (53)புற்றுநோய் காரணமாக ஆக்லாந்தில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். டி20கிரிக்கெட்டுக்கு அடித்தளமிட்ட பெருமை மார்ட்டின் குரோவையே சேரும்.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 160-ஆவது இடத்தில் உள்ளது
Download this pdf
Download this pdf
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு