Pages

    Showing posts with label DAILY CURRENT AFFAIRS. Show all posts
    Showing posts with label DAILY CURRENT AFFAIRS. Show all posts

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 , Current Affairrs March 11, PDF


    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016
    v முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள், வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்து, வெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
    v மகா சிவராத்திரியையொட்டி,சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016 , Current Affairs March 10

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-10 ,2016
    v சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 - IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 - IRNSS –இந்தியாவின் புவியிடங்காட்டி
    Þ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -7-2016 Current Affairs march 7 PDF

    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -7-2016
    Þ    உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் கலவரம் நிகழ்ந்தபோது அதைக் கட்டுப்படுத்த மாநிலம் காவல் துறை தவறிவிட்டதாகவும்,இந்த விவகாரத்தில் உளவுத் துறை சரியாக செயல்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.முசாஃபர் நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் 62 பேர் பலியாகினர்.இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு,அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதி விஷ்ணு சஹாயைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உத்தரப் பிரதேச அரசு அமைத்தது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு Current Affairs March 8 PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-8 ,2016, பெண்கள் தினம் சிறப்பு
    Þஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளைச் சேகரிக்கதன்னார்வலர்களுக்கு அழைப்பு.ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன.
    Þ   "ஐ.என்.எஸ். விராட்' கப்பலில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தலைமைப் பொறியாளர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -6-2016 , Current Affairs March, 6 PDF


    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -6-2016
    Þ  தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் -5-2016 , Current Affairs March ,5 PDF


    நடப்பு நிகழ்வுகள்மார்ச் -5-2016
    Þ   தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல,கேரளம், மேற்கு வங்கம்,அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது. 
    முக்கிய குறிப்புகள்
    Þ   முதன் முறையாக வரும் தேர்தலில், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
    Þ   வாக்குப்பதிவு எந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதற்காக நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    DAILY CURRENT AFFAIRS : நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 4, 2016 PDF

    நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 4, 2016
    Þ   தெற்கு ரயில்வே அலுவலகங்களிலும்,சென்னை ரயில்வே கோட்ட அலுவலங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    DAILY CURRENT AFFAIRS :நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016



    நடப்பு நிகழ்வுகள் மார்ச் , 3, 2016

    Þமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்குபுதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை


    நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை
    Ø ஆரோவில் சர்வதேச நகரம்உருவான தின விழாஞாயிற்றுக்கிழமை அதிகாலைகொண்டாடப்பட்டது.
     
    புதுச்சேரி அருகே உள்ளஆரோவில் சர்வதேச நகரம்,மகான் அரவிந்தரின் முக்கியசீடரான ஸ்ரீ அன்னை என்றுஅனைவராலும்அழைக்கப்படும், மீராஅல்போன்சாவின் கனவுநகரமாக 1968-ஆம் ஆண்டுபிப்ரவரி 28-ஆம் தேதிஉருவாக்கப்பட்டது.

    நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்



    நடப்பு நிகழ்வுகள் 23,பிப்ரவரி-2016-குஜராத் தகவல்கள்

    v நாகை மாவட்டம்,தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மைநினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.

    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016


    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016

    நடப்பு நிகழ்வுகள் 18-02-2016 முதல் 22-02-2016.

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 17-02-2016

    v மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    v அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த இசைத்தட்டுக்கான
     கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். "1989'
     என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது.திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன்58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின்‘அமி’ குறும்படத்துக்கு சிறந்த இசை படத்துக்கான விருது கிடைத்தது. இவரது பெற்றோர் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட் டிருந்தது.
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 13/2/2016 –16-02-2016

    நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளராக ப்ரித்திகா யாஷினி திங்கள்கிழமை பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டார்

    v இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 12/2/2016 – இமாச்சல பிரதேசம் ஆப்பிள் மாநிலம்

    v உலகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. (LIGO Laser Interferometer Gravitational-Wave Observatory சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளது.1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)

    v இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்துநியமிக்கப்பட்டுள்ளார்.
     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 11/2/2016 –ஒடிசா பற்றிய தகவல்கள்


    v  அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் "எம்.வி.நிப்பான் மேரு' எனும் கப்பலில் சென்னைக்குஅண்மையில் வந்தனர்.

    v  ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை புரிந்துள்ள அவரை,பிரதமர் நரேந்திர மோடி, தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்.

     

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 10/2/2016 – சிக்கிம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

    v நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79)திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த2014-ஆம் பிப்ரவரி மாதம் முதல் 2015 அக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராக அவர் பதவி வகித்தார். அவரது மரணச் செய்தி அறிந்தவுடன், நேபாள பிரதமர் கே.பி.ஓலி சர்மா தலைமையில் அமைச்சரவை கூடியது.

    v தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை.
     *சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை.
     தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு "த', "மி', "ழ்', "நா', "டு' என்ற வடிவில் 5 புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், "மி' வடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு.