அரசுப் பள்ளிகளில் 11,992 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2.60 லட்சம் மாணவர்கள் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நர்சரிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்தது.
இதையடுத்து, அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8,934 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2.1 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழிப் பிரிவுகளில் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 3,058 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளிகளில் 53,668 மாணவர்கள் படிப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு