தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், தொடக்க பள்ளியில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,பல்வேறு பள்ளிகளுக்கு, பணி நிரவல் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரவலுக்கு பின் சுமார் 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னமும் உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இன்னும் தாமதப்படுத்தி கலந்தாய்வு தேதி அறிவிக்கும்போது, மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும். இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் முறைப்படி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு