Pages

    ஈடேறுமா 'நூறு' கனவு:இன்று உலக எழுத்தறிவு தினம்

           ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு .நா., சார்பில் செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது


             'எழுத்தறிவு மற்றும் நீடித்த சமூகம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.ஒரு நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தை பொறுத்தே அந்நாட்டின் சமூக வளர்ச்சி அமைகிறது. ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை.எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.

    எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையில், 75.7 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவவர்களாக உள்ளனர். எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.

    இந்தியாவின் நிலைகடந்த 2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001 விட 6.9 சதவீதம் அதிகம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி நாம் முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு