Pages

    School: 499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்.

             சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  வாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது

                  அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: மாணவர்கள் கணித பாடத்தை எளிய வகையில் கற்க, 1.28 கோடி ரூபாய் செலவில், 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகளை துவங்கவும், 186 தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் தகுதியான குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன


    கணினி வழியில், வீடியோ கான்பரன்ஸ் வகுப்புகள் நடத்த, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில், 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, அனிமேஷன் வகை குறுந்தகடுகள், 1.5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆசிரியர் தங்க, திருச்சியில், மூன்று கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்.


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு