Pages

    TET ARTICLE : ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணமும் பிண்ணனியும் ; அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?


    ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின்  முந்தைய விவரம் : 

    தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டைய சட்டமன்றத்தில் முன்னுக்குப்பின் முரணாக 5சதவீத இடஒதுக்கீடும் வெட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.. அதில் வெயட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செ;யது உத்ததரவிட்டது ....


    ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை: 
    இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர்தகுதித்தேர்வின் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5சதவீத மேல்முறையீடு வழக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்.. 

    இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...

    என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை : 

    ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..

    என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?

    ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடிரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள்  அவ்வாறு அளிக்க தமிழகஅரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்....  என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???

    போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?

    5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. வேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் மிகப்பெறிய வழக்கும் பிர்சசனையும் வரும் என சூசகமாக தெரிவித்தார்....

    கட்டுரை எழுதியவர் : 

    பி.இராஜலிங்கம் புளியங்குடி. மாநிலப்பொருளாளர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்..செல் : 95430 79848
    நன்றி...
    இரா.செல்லத்துரை மாநில தலைவர் ...
    திரு. இராஜாஇராமன் டெல்லி  உச்சநீதிமன்றம் ... வழக்கறிஞர் 

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு