பொதுப்பணித் துறையில், 98 உதவி பொறியாளர் காலியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேர்வர் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
தமிழக பொதுப்பணித் துறையில், உதவி பொறியாளர் பணிக்கு, காலியாக உள்ள, 98 இடங்களுக்கு, கடந்த ஆண்டு, ஜூலை 27ல், எழுத்துத் தேர்வு நடந்தது; இதில், 31 ஆயிரம் பேர் எழுதியதில், 218 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
வரும், 10, 11 மற்றும் 14ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்; இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு, வரும் 28ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.குரூப் - 2 முதல்நிலை தேர்வு முடிவு, இரு வாரங்களில் வெளியிட வாய்ப்புஉள்ளது. தற்போதைய நிலை யில், 12 துறைகளில் பணி நியமன தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு