குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவராக பொறுப்பு வகிக்கும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 213 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வை, 27 ஆயிரத்து 552 பேர் எழுதுகின்றனர்.
சென்னை எழும்பூரில் தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியன், இதற்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு