Pages

    விரைவில் 900 ஆசிரியர்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.


    புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள 900 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.



    பின்னர் பேசிய அவர், புதுச்சேரியில் அடுத்தாண்டு முதல் சுகாதாரமான கழிவறை, சுத்தமான குடிநீரை பராமரிக்கும் அரசு பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மத்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம்கிடைத்துள்ளதாகவும், அங்கு முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பை தொடங்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.​

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு