Pages

    செப்., 20ல் மாநாடு:'ஜாக்டோ' தீவிரம்.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்களின்
    கூட்டமைப்பான, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவின், உயர்நிலைக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதுகுறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைதல், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் அமல்படுத்துதல் போன்றவை அறிவிக்கப்பட்டன. 

    அவை, தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இவை உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 8ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதற்காக, வரும், 20ம் தேதி மாவட்ட தலைநகர்களில் ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு