"பகுதி நேர ஆசிரியர்களை, தகுதித்தேர்வு இல்லாமல் பணி நிரந்தரம் செய்ய
வேண்டும்,' என, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக அரசு, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை நியமித்தது. எவ்வித எதிர்கால பாதுகாப்புமின்றி, பணியாற்றி வருவதாக, பகுதிநேர ஆசிரியர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கடந்தாண்டு ஏப்., மாதம், 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அதில், "2012ல், வேலை வாய்ப்பக பதிவு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அளவில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலவரையறை செய்து, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், பகுதிநேர ஆசிரியர்களை, பள்ளி கல்வித்துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். கல்வியாண்டின் அனைத்து வேலை நாட்களிலும், முழு நேர பணி வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர். ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு